என்.ஆர்.,தியாகராஜன் நினைவு தின ஊர்வலம்

தேனி: தேனியை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி, முன்னாள் தமிழக சட்டசபை எதிர்கட்சித்தலைவர் என்.ஆர்.தியாகராஜன் நினைவு தின ஊர்வலம் தேனி பெத்தாட்சி விநாயகர் கோயில் அருகில் இருந்து அவரது நினைவாலயம் வரை நடந்தது.

ஊர்வலத்தில் தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன், காங்., மாவட்ட தலைவர் முருகேசன், வெல்பேர் கட்சி மாநில தலைவர் அப்துல்ரஹ்மான், மாவட்ட செயலாளர் சகுபர் சாதிக், தி.மு.க., நகரசெயலாளர் நாராயணபாண்டியன், மருத்துவர் அணி நிர்வாகி பாண்டியராஜன், நகராட்சி துணைத்தலைவர் செல்வம், வி.சி.க., மண்டல செயலாளர் தமிழ்வாணன், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாவட்ட பொதுச்செயலாளர் சக்கரவர்த்தி, மக்கள் நீதி மய்யம் தலைமை மைய பேச்சாளர் துரைவேலன், வணிக சங்க பேரமைப்பு மாவட்ட தலைவர் செல்வகுமார், வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு தென்மண்டல தலைவர் முத்து ராமலிங்கம், தமிழக தேசிய விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சீனிராஜ், தேனி புது பள்ளி வாசல் ஜமாத் தலைவர் சர்புதீன், தேனி மாவட்ட கம்ம வார் சங்க தலைவர் ஜெகநாதன், தமிழக நாயுடு, நாயக்கர் சங்க மாநில செயல் தலைவர் கவிதாலயா சரவணன், மாவட்ட சுதந்திர போராட்டவீரர்கள் சங்கம் முருகேசன், லட்சுமிபுரம் கிராம கமிட்டி தலைவர் சிவசங்கர், லட்சுமிபுரம் கம்மவார் சங்க தலைவர் கார்த்திகேயன், பா.ஜ., மாவட்ட தலைவர் ராஜபாண்டி உள்பட பலர் பங்கேற்றனர். என்.ஆர்.டி., கல்லுாரி மாணவிகள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

தமிழக அரசு சார்பில் என்.ஆர்., தியாகராஜனுக்கு சிலை வைக்க வேண்டும், பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும், மணிமண்டபம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement