ஸ்ரீகண்டேஸ்வரா உண்டியல் வசூல் ரூ.2.59 கோடி

மைசூரு: நஞ்சன்கூடின் பிரசித்தி பெற்ற ஸ்ரீகண்டேஸ்வரா கோவிலில், ஒரே மாதத்தில் 2.59 கோடி ரூபாய் காணிக்கை வசூலாகியுள்ளது.

மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகாவில் உள்ள ஸ்ரீகண்டேஸ்வரர் கோவில், வரலாற்று பிரசித்தி பெற்றது. உள்நாடு, வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

மார்ச் மாதம் யுகாதி, தமிழ் புத்தாண்டு, கோடை விடுமுறை என்பதாலும், கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்தது. இதனால் ஒரு மாதத்துக்கு பின், உண்டியல் நிரம்பியது. நேற்று முன்தினம் போலீஸ் பாதுகாப்புடன், எண்ணும் பணி நடந்தது. காலை துவங்கிய பணி, நள்ளிரவு வரை நீடித்தது.

உண்டியல்களில் 2.59 கோடி ரூபாய் வசூலாகியிருந்தது. அது மட்டுமின்றி 103 கிராம் தங்கம், 3 கிலோ வெள்ளி, 24 வெளிநாட்டு கரன்சிகளும் இருந்தன.

Advertisement