டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் நயினார் நாகேந்திரன்!

புதுடில்லி: டில்லி சென்றுள்ள தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (ஏப்ரல் 29) பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
அண்மையில் தமிழக பா.ஜ., தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றார். அவசர அழைப்பில் டில்லி சென்ற நயினார் நாகேந்திரன், அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.
அப்போது அவருக்கு தி.மு.க., அரசின் நிர்வாக தோல்விகளை, மக்களுக்கு எல்லா வழிகளிலும் எடுத்துச் சொல்ல வேண்டும், போராட்டங்கள், பொதுக்கூட்டங்களை இதற்காகவே திட்டமிடுங்கள் என பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை அமித்ஷா வழங்கி உள்ளார்.
அவர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து பேசினார்.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 29) 12 மணி அளவில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். அப்போது நயினார் நாகேந்திரன் உடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உடன் சென்று இருந்தனர்.
பிரதமர் மோடி நயினார் நாகேந்திரன் உடன் தமிழக அரசியல் சூழல் மற்றும் அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தியதாக டில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. பா.ஜ., மாநில தலைவரான பின் முதல்முறையாக நயினார் நாகேந்திரன் டில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





மேலும்
-
நாட்டின் பாதுகாப்புக்காக ஸ்பைவேரை பயன்படுத்துவதில் தவறில்லை: சுப்ரீம் கோர்ட்
-
பார்லி., சிறப்பு கூட்டத்தொடர் வேண்டும்: பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம்
-
லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு: வணிக வரித்துறை அதிகாரி, மனைவிக்கு 4 ஆண்டு சிறை
-
புனே விமான நிலையத்திற்குள் புகுந்த சிறுத்தை; கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை தீவிரம்
-
ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடுகளில் இந்தியா 5வது இடம்; இதோ பட்டியல்!
-
காங்கேயம் அருகே 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கண்ணபுரம் மாட்டுச்சந்தை துவக்கம்: பசுமாடுகள் ரூ.1.25 லட்சம், பூச்சி காளை ரூ.1.75 வரை விற்பனை