கொள்ளையடிச்சது அவங்க! பழிசொல்லும், அபராதமும் எங்களுக்கா... கனிமவள விவகாரத்தில் விவசாயிகள் கேள்வி

கோவை:
கோவையில் கனிமவள கொள்ளை நடந்த போது, நடவடிக்கை எடுக்காதவர்கள், இப்போது அப்பாவி விவசாயிகள் மீது, அபராதம் விதிப்பதும், விசாரணை என்ற பெயரில் அலைக்கழிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று, விவசாயிகள் ஆவேசத்துடன் கேட்கின்றனர்.
கோவை, பேரூர் தாலுகாவுக்குட்பட்ட ஆலாந்துறை, மாதம்பட்டி, தென்கரை, மத்வராயபுரம், தேவராயபுரம், வெள்ளிமலைப்பட்டினம், நரசீபுரம் மற்றும் தொண்டாமுத்துார் கிராமங்களில் உள்ள, விவசாய விளைநிலங்களில், விவசாயிகள் கனிமவளத்தை கள்ளத்தனமாக அள்ளி விற்பனை செய்ததாக புகார் தெரிவித்து, விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
மலையை ஒட்டிய பகுதிகளில், விளைநிலங்கள் உள்ள விவசாயிகள், தரிசுநில மேம்பாட்டுத்திட்டத்தில், விளை நிலங்களாக மாற்ற பூமியை சமன் செய்வது வழக்கம். அதே போல் வடக்கிலிருந்து, பூமி தெற்கு நோக்கி சரிவாகவும் அமைந்துள்ளது.
இப்படிப்பட்ட பூமியை, விவசாயம் செய்வதற்காக சிறு, சிறு பகுதிகளாக பிரித்து ஏரிகள் அமைத்து, பாசனம் செய்வதற்கு ஏதுவாக மாற்றியமைத்துள்ளனர். ஆனால், இந்த பணியின் போது, மண்ணில் இருந்த கனிமவளங்களை விவசாயிகள் அள்ளியதாக, அவர்கள் மீது புகார் எழுப்பப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக பேரூர் தாலுகாவுக்குட்பட்ட, நொய்யல் ஆற்றுப்படுகையில் கனிமவளக்கொள்ளை நடந்து வந்தது. அப்பகுதிகளில் இருந்து மணல் எடுப்பதையும், விற்பனை செய்வதையும் ஒரு சிலர் வாடிக்கையாக கொண்டிருந்தனர். இது குறித்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் பலமுறை, மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என, கேள்வி எழுப்புகின்றனர் விவசாயிகள்.
நாங்கள் பலிகடாவா?
விவசாயிகள் தீத்திபாளையம் பெரியசாமி, செம்மேடு செந்தில்குமார் ஆகியோர் கூறுகையில், 'அரசியல்வாதிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்து, அத்துமீறி கனிமவளங்களை கொள்ளையடித்து சென்றபோது, கோட்டைவிட்ட அதிகாரிகள், தற்போது கோர்ட் தலையிட்டு, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டவுடன், அப்பாவி விவசாயிகள் மீது அபராதம் விதிக்கின்றனர்.
குற்றவாளிகள் யார், பின்னணியில் எந்த அரசியல் பிரமுகர் என்று தெரிந்தும், ஏதுமறியாத விவசாயிகள் மீது மட் டும் அபராதம் விதிப்பதை, ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நடவடிக்கையை, வருவாய்த்துறையினர் கைவிட வேண்டும்' என்று தெரிவித்தனர்.
இது குறித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலெக்டரிடம் மனு சமர்ப்பித்தனர். முன்னதாக, இது தொடர்பாக நேற்று ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
மேலும்
-
போலீஸ் ஸ்டேஷனில் புகுந்த சிறுத்தை; நீலகிரியில் போலீசார் அதிர்ச்சி!
-
குஜராத்தில் சட்டவிரோதமாக இருந்த 6500 பேர்; ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடிப்பு
-
டில்லியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்!
-
காஷ்மீரில் 48 சுற்றுலா தலங்கள் மூடல்; மாநில அரசு நடவடிக்கை
-
மதுரை சித்திரை திருவிழா; கொடியேற்றத்துடன் துவக்கம்
-
கனடாவில் காணாமல் போன இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு!