பெங்களூரு - மதுரை சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையை முன்னிட்டு, பயணியரின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், சேலம் வழியே பெங்களூரு - மதுரை இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் ரயில்வே கோட்டம் சார்பில், வெளியிட்டுள்ள அறிக்கை:

பெங்களூரு - மதுரை சிறப்பு ரயில், நாளை இரவு 7:00 மணிக்கு கிளம்பி கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியே அடுத்த நாள் காலை 6:15 மணிக்கு மதுரை சென்றடையும். கிருஷ்ணராஜபுரம் இரவு 7:11 மணி, பங்காருபேட்டை - 7:59, சேலம் ஜங்சன் - 10:50, நாமக்கல் - 11:55, கரூர் - 1:43, திண்டுக்கல் - 3:30, கொடைக்கானல் ரோடு - 3:55 மணிக்கு வந்து செல்லும்.

மதுரை - பெங்களூரு சிறப்பு ரயில், மே 1 காலை 9:10 மணிக்கு கிளம்பி திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியே அன்று இரவு 7:50 மணிக்கு பெங்களூரு சென்றடையும். கொடைக்கானல் ரோடு காலை - 10:08, திண்டுக்கல் - 10:45, கரூர் - 12:08, நாமக்கல் - 12:40, சேலம் - 2:20, பங்காரு பேட்டை - 5:49, கிருஷ்ணராஜபுரம் - 6:43 மணிக்கு வந்து செல்லும்.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

- நமது நிருபர் -.

Advertisement