ராட்சச குடிநீர் குழாயிலிருந்து வீணாகும் தண்ணீர்!

கடலூர்: வீராணம் குழாயிலிருந்து ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வெளியேறி வருகிறது.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பால்பண்ணை அருகில் சென்னைக்கு குடிநீர் செல்லும் வீராணம் குடிநீர் திட்ட ராட்சச குழாய் செல்கிறது. சுமார் 240 கிலோமீட்டர் தூரத்திற்கு செல்லும் இந்த ராட்சச குடிநீர் குழாய் பல இடங்களில் காற்று வெளியேற தானியங்கி வால்வுகள் பொருத்தப்பட்டுள்ளன. குழாயில் தினசரி வீராணம் ஏரியிலிருந்து 70 கன அடி தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
இவ்வாறான நிலையில் அதிக அழுத்தத்துடன் தண்ணீர் செல்வதால் அதன் வால்வு பழுதானதின் காரணமாக தானாக திறந்து கொண்டு ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் பல அடி உயரத்திற்கு எழும்பி விரயம் ஆகியது. போதுமான பராமரிப்பு பணிகளை இல்லாமல் போனதாலேயே இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகளும் பொதுமக்களும் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.
கோடைகலத்தில் வீராணம் ஏரியில் பாசனத்திற்கு தண்ணீர் தருவதை விட சென்னை குடிநீருக்கு தண்ணீர் கொண்டு செல்ல அதிக அக்கறை காட்டும் அரசு அதிகாரிகள் ராட்சச குழாய் பகுதிகளை போதுமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாமல் விட்டது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த தண்ணீர் வெளியேறும் பகுதியில் சரி செய்வதற்கு அதன் பணியாளர்கள் நீண்ட நேரம் முயன்றும் முடியாத நிலையே ஏற்பட்டது.
மேலும்
-
அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கு: போலீசாருக்கு ரூ.1 அபராதம் விதித்தது மனித உரிமை ஆணையம்
-
தி.மு.க., பீர் விருந்து; இ.பி.எஸ்., விமர்சனம்
-
முஜிபுர் ரஹ்மான் படம் கொண்ட ரூபாய் நோட்டுகள் நிறுத்தம்; நெருக்கடியில் வங்கதேசம்!
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஜிப்லைன் ஆபரேட்டர் மீது சந்தேகம்!
-
தண்ணீர் தொட்டியில் 4 வயது குழந்தை பலி; மதுரை பள்ளி உரிமையாளர் கைது
-
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பாலியல் துன்புறுத்தல்; விசாகா கமிட்டி விசாரணை