கிடப்பில் ரோடு பணி : பொதுமக்கள் அவதி

அனுப்பர்பாளையம்:
-திருப்பூர் ஒன்றியம், பெருமாநல்லுார் ஊராட்சி, சி.எஸ்.ஐ., காலனியில், 200 வீடுகளில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

காலனியின் பிரதான சாலையை புதுப்பிக்க வலியுறுத்தி, அப்பகுதியினர் நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையொட்டி, ஊராட்சி ஒன்றியம் சார்பில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரோடு அமைக்கும் பணி துவங்கியது. ஆனால், தார் போடும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களாக பணி நடைபெறாமல் உள்ளதால், ரோட்டில் உள்ள சிமென்ட் கலந்த மண் அரித்து பெரிய ஜல்லி கற்கள் பெயர்ந்து நிற்கிறது. ரோட்டை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement