ஹரியானாவில் ஐஸ்கிரீம் விற்கும் பாக்., முன்னாள் எம்.பி.,: குடும்பத்தினர் மீது நாடு கடத்தல் நடவடிக்கை

சண்டிகர்: பாகிஸ்தான் முன்னாள் எம்.பி., ஒருவர் ஹரியானாவில் ஐஸ்கிரீம் விற்பனை செய்து வருகிறார். அவரது குடும்பத்தினர், விசா விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு, நாடு கடத்தல் நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர்
பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்களை வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது, இதனால் ஏராளமானோர் வெளியேறினர். ஏப்ரல் 24 முதல் நான்கு நாட்களில் மொத்தம் 537 பாகிஸ்தானியர்கள் அட்டாரி-வாகா எல்லை வழியாக இந்தியாவிலிருந்து வெளியேறினர்.
இந்த நிலையில், ஹரியானாவின் பதேஹாபாத் மாவட்டத்தில் வசிக்கும் பாகிஸ்தானின் முன்னாள் எம்.பி., தபயா ராமின் குடும்பத்தினர் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். இவர் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்.
மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து உள்ளூர் போலீசார் தபயா ராமின் குடும்பத்தினரை விசாரணைக்காக அழைத்தனர். இருப்பினும், பின்னர் அவர்கள் பதேஹாபாத் மாவட்டத்தில் உள்ள ரதியா தெஹ்சிலின் ரத்தன்கர் கிராமத்தில் உள்ள தங்கள் வீட்டிற்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் இந்திய குடியுரிமையைப் பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள 28 பேர் நிரந்தர வசிப்பு அனுமதிக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாபில் பிரிவினைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிறந்த தபயா ராம், 1947 க்குப் பிறகு மத அழுத்தத்தை மீறி நாட்டில் தங்கினார். அவரும் அவரது குடும்பத்தினரும் கட்டாய மதமாற்றத்தை எதிர்த்தனர், மேலும் காலப்போக்கில், நிலைமை மேலும் விரோதமாக மாறியது.
1988ம் ஆண்டில், லோஹியா மற்றும் பக்கார் மாவட்டங்களிலிருந்து பாகிஸ்தான் பார்லிமென்ட்க்கு ராம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரது உறவினரான ஒரு பெண், மத பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்பட்டார். ராம் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் நீதி கேட்டபோது, அவரது மனு நிராகரிக்கப்பட்டது. ஏமாற்றமடைந்து, தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சமடைந்த அவரது குடும்பம், 2000ம் ஆண்டில் பாகிஸ்தானை விட்டு வெளியேறியது.
ஆரம்பத்தில் ஒரு மாத விசாவில் ரோதக்கிற்கு வந்த அவர்கள், இறுதியில் ரத்தன்கரில் குடியேறினர்.
அப்போதிருந்து, ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் ஐஸ்கிரீம் விற்று தனது பெரிய குடும்பத்தை ராம் காப்பாற்றி வருகிறார்.
இந்தியாவில் ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்க கடுமையாக உழைத்துள்ளார். அவரது ஏழு குழந்தைகளும் சமூகத்திற்குள் திருமணம் செய்து கொண்டு தங்கள் சொந்த குடும்பங்களைத் தொடங்கினர்.
அரசியல் குழுக்கள் மற்றும் சமூகத் தலைவர்களின் உதவியுடன், தபயா ராம் இந்திய குடியுரிமையைப் பெற்றார். இந்தியாவில் தற்போது உணரும் பாதுகாப்பு மற்றும் சகோதரத்துவ உணர்வுக்கு ராம் நன்றி தெரிவித்தார்.
தற்போது இவரது குடும்பத்தினர் 28 பேர் நாடு கடத்தல் நடவடிக்கை எதிர்கொள்ள நேர்ந்துள்ளனர்.




மேலும்
-
'அளப்பறிய அன்பை உணர்ந்தேன்' பிரதமர் சந்திப்புக்கு பின் நயினார்
-
இணைய தொடர்பு சேவைக்கான செயற்கைக்கோள்களை ஏவிய அமேசான்
-
வீடு புகுந்து எஸ்.ஐ., கணவரை தாக்கி 10 சவரன் கொள்ளை
-
கழிவு சாம்பல் கொடுத்து ஏமாற்றிய சுடுகாடு ஊழியர்கள் தப்பியோட்டம்
-
சட்ட கல்வியில் தலையிடாதீர்கள்; பார் கவுன்சிலுக்கு கோர்ட் கண்டிப்பு
-
கம்பன் அரசு பள்ளியில் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி