சரக்கு ஏற்றுமதியில் தமிழகம், தெலுங்கானா ஏற்றம்

புதுடில்லி: வெளிநாடுகளுக்கு பெட்ரோலியம், ரத்தினம் மற்றும் நகை அல்லாத பொருட்களின் ஏற்றுமதியில் தென் மாநிலங்கள் முன்னேற்றம் கண்டு உள்ளன.
இது தொடர்பாக வர்த்தகத்திற்கான வர்த தேசிய இறக்குமதி, ஏற்றுமதி ஆவணம் ( National Import-Export Record for Yearly Analysis of Trade (NIRYAT)) வெளியிட்ட பட்டியலில் குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் முதல் இரண்டு இடத்தில் இருந்தாலும், கடந்த ஆண்டை காட்டிலும், இந்த நிதியாண்டில் ஏற்றுமதி சரிவை சந்தித்து உள்ளது.
2025ம் நிதியாண்டில் சரக்கு ஏற்றுமதியில் குஜராத் 116 பில்லியன் டாலர்களுடன் முதலிடத்தில் உள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டை காட்டிலும் 13 சதவீதம் குறைவு.
மஹாராஷ்டிரா 65.9 பில்லியன் டாலர். 2 சதவீதம் குறைவு.
ஆனால், மாறாக சரக்கு ஏற்றுமதியில் தென் மாநிலங்களான,
தெலுங்கானா 36
தமிழகம் 20
கர்நாடகா 14
ஆந்திரா 5 சதவீதம் அதிகரித்து உள்ளது.
குஜராத் மற்றும் மஹாராஷ்டிராவிற்கு அடுத்த இடத்தில் தமிழகம் (52.1 பில்லியன் டாலர்), கர்நாடகா (30.5 பில்லியன் டாலர்) and உ.பி., (22 பில்லியன் டாலர்)
மொத்தத்தில், 2025ம் நிதியாண்டில் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 436.4 பில்லியன்டாலர். கடந்த ஆண்டு 437.1 பில்லியன் டாலர் மட்டுமே ஏற்றுமதியானது.
அதில், பெட்ரோலியம், ரத்தினம் மற்றும் நகைகள் அல்லாத பொருட்களின் ஏற்றுமதி 2024 நிதியாண்டில் 320.2 பில்லியன் டாலர் ஆக இருந்தது. 2025 நிதியாண்டில் 344.2 பில்லியன்டாலர் ஆக அதிகரித்து உள்ளது..
கடந்த 2024-25ம் நிதியாண்டில் இந்திய மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு செய்த சரக்கு ஏற்றுமதியின் மொத்த மதிப்பு வருமாறு:
குஜராத் - 116 பில்லியன் டாலர்
மகாராஷ்டிரா -65 பில்லியன் டாலர்
தமிழ்நாடு - 52 பில்லியன் டாலர்
கர்நாடகா - 30 பில்லியன் டாலர்
உ.பி., - 21.98 பில்லியன் டாலர்
ஆந்திரா - 20.78 பில்லியன் டாலர்
தெலுங்கானா- 19 பில்லியன் டாலர்
மேற்கு வங்கம்- 12.66 பில்லியன் டாலர்
ஒடிசா - 10 பில்லியன் டாலர்
ம.பி., - 7.82 பில்லியன் டாலர்
ராஜஸ்தான் - 7 பில்லியன் டாலர்
கேரளா - 4.77 பில்லியன் டாலர்
ஹரியானா - 2.49 பில்லியன் டாலர்
கோவா - 2.47 பில்லியன் டாலர்
சத்தீஸ்கர்- 2.18 பில்லியன் டாலர்
பீகார் - 2 பில்லியன் டாலர்
ஜார்க்கண்ட் - 1.89 பில்லியன் டாலர்
பஞ்சாப் - 1.84 பில்லியன் டாலர்
டில்லி - 875 மில்லியன் டாலர்
அசாம் - 550 மில்லியன் டாலர்
ஹிமாச்சல் - 227 மில்லியன் டாலர்
(ஒரு பில்லியன் டாலர் என்பது, இந்திய மதிப்பில் 8,515 கோடி ரூபாய்)
மேலும்
-
பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
-
மேலே பாம்பு,கீழே நரிகள்; குதித்தால் அகழி, ஓடினால் தடுப்புச்சுவர் தடைகளை தாண்டி சாதித்ததாக முதல்வர் பெருமிதம்
-
'அளப்பறிய அன்பை உணர்ந்தேன்' பிரதமர் சந்திப்புக்கு பின் நயினார்
-
இணைய தொடர்பு சேவைக்கான செயற்கைக்கோள்களை ஏவிய அமேசான்
-
வீடு புகுந்து எஸ்.ஐ., கணவரை தாக்கி 10 சவரன் கொள்ளை
-
கழிவு சாம்பல் கொடுத்து ஏமாற்றிய சுடுகாடு ஊழியர்கள் தப்பியோட்டம்