'பிளே ஆப்' செல்லுமா பஞ்சாப் * பிரப்சிம்ரன் சிங் நம்பிக்கை

புதுடில்லி: ''முதலில் 'பிளே ஆப்' செல்ல முயற்சிப்போம். ஒருவேளை தகுதி பெற்றுவிட்டால், அடுத்து கோப்பை நோக்கிய பயணம் துவங்கும்,'' என பஞ்சாப் வீரர் பிரப்சிம்ரன் சிங் தெரிவித்துள்ளார்.
பிரிமியர் தொடரில் பஞ்சாப் அணி இதுவரை கோப்பை வென்றது இல்லை. 2014ல் பைனலுக்கு சென்றது தான் அதிகபட்சம். அடுத்து ஒருமுறை கூட லீக் சுற்றை தாண்டவில்லை. தற்போது ஷ்ரேயஸ் தலைமையில், பாண்டிங் பயிற்சியில் சிறப்பாக செயல்படுகிறது. இதுவரை பங்கேற்ற 9 போட்டியில் 5ல் வென்று (3 தோல்வி, 1 முடிவில்லை) 11 புள்ளியுடன் 5வது இடத்தில் உள்ளது.
மீதமுள்ள 5 போட்டியில் 4ல் வென்றால் 2014க்குப் பின் முதன் முறையாக 'பிளே ஆப்' செல்லலாம். இதுகுறித்து பஞ்சாப் துவக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 24, கூறியது:
பஞ்சாப் அணியில் ஏழு ஆண்டாக விளையாடுகிறேன். அணி நிர்வாகம் என்மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளது. இம்முறை எங்கள் அணி முற்றிலும் வித்தியாசமாக செயல்படுகிறது. பெரும்பாலான போட்டிகளில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறோம். கோல்கட்டாவுக்கு எதிரான போட்டி மழையால் ரத்தானது துரதிருஷ்டவசமானது. எனினும் 'பிளே ஆப்' வாய்ப்பு எங்கள் அணிக்கு அதிகமாக உள்ளது. ஒருவேளை தகுதி பெற்று விட்டால், அடுத்து கோப்பை வெல்வதை நோக்கி எங்கள் பயணம் இருக்கும். பயிற்சியாளர் பாண்டிங், கேப்டன் ஷ்ரேயஸ் என இருவரும் சிறப்பாக செயல்படுகின்றனர். களத்தில் இருக்கும் போது, சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகளை எடுத்து திட்டமிடுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
'அளப்பறிய அன்பை உணர்ந்தேன்' பிரதமர் சந்திப்புக்கு பின் நயினார்
-
இணைய தொடர்பு சேவைக்கான செயற்கைக்கோள்களை ஏவிய அமேசான்
-
வீடு புகுந்து எஸ்.ஐ., கணவரை தாக்கி 10 சவரன் கொள்ளை
-
கழிவு சாம்பல் கொடுத்து ஏமாற்றிய சுடுகாடு ஊழியர்கள் தப்பியோட்டம்
-
சட்ட கல்வியில் தலையிடாதீர்கள்; பார் கவுன்சிலுக்கு கோர்ட் கண்டிப்பு
-
கம்பன் அரசு பள்ளியில் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி