இந்திய பெண்கள் 'திரில்' வெற்றி * சரிந்தது தென் ஆப்ரிக்க அணி

கொழும்பு: முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இந்திய அணி 15 ரன் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.
இலங்கையில் பெண்களுக்கான முத்தரப்பு ஒருநாள் தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் பங்கேற்கின்றன.
முதல் போட்டியில் இந்திய அணி, இலங்கையை வீழ்த்தியது. நேற்று தனது தனது இரண்டாவது போட்டியில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை எதிர்கொண்டது. 'டாஸ்' வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
பிரதிகா அபாரம்
இந்திய அணிக்கு பிரதிகா, ஸ்மிருதி மந்தனா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 83 ரன் சேர்த்த போது மந்தனா (36) அவுட்டானார். ஒருநாள் அரங்கில் தொடர்ந்து ஐந்தாவது அரைசதம் அடித்தார் பிரதிகா. இவர், 78 ரன் எடுத்து திரும்பினார். ஹர்லீன் (29), ஜெமிமா (41), ரிச்சா (24) கைகொடுத்தனர். இந்திய அணி 50 ஓவரில் 276/6 ரன் எடுத்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (41) அவுட்டாகாமல் இருந்தார்.
ஸ்னே கலக்கல்
தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் லாரா, தஸ்மின் பிரிட்ஸ் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 140 ரன் சேர்த்த போது லாரா (43) அவுட்டானார். தஸ்மின் சதம் அடித்தார். தென் ஆப்ரிக்கா 170/2 என வலுவாக இருந்த போது, வெயில் கடுமை காரணமாக, தஸ்மின் (109) 'ரிட்டயர்டு ஹர்ட்' முறையில் திரும்பினார். இதன் பின் போட்டியில் திருப்பம் ஏற்பட்டது. சுனே லஸ் (28), டிரையான் (18) நிலைக்கவில்லை.
தென் ஆப்ரிக்கா கைவசம் 5 விக்கெட் மீதம் இருக்க, கடைசி 18 பந்தில் வெற்றிக்கு 28 ரன் தேவைப்பட்டன. 48 வது ஓவரை வீசிய ஸ்னே ராணா, நாடின் கிளார்க் (0), டெர்க்சனை (30 அவுட்டாக்கினார்.
மீண்டும் வந்த தஸ்மினை (109) கடைசி பந்தில் அவுட்டாக்கினார் ஸ்னே ராணா. அடுத்து கிளாஸ் (2), மிலபா (8) ரன் அவுட்டாகினர். தென் ஆப்ரிக்கா 49.2 ஓவரில் 261 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது.
5 விக்கெட் சாய்த்த ஸ்னே ராணா ஆட்டநாயகி ஆனார். இது இந்திய அணியின் தொடர்ச்சியான 8வது வெற்றி ஆனது.
அபராதம்
இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் இந்திய அணியினர் ஒரு ஓவர் குறைவாக பந்து வீசி இருந்தனர். இதையடுத்து போட்டி சம்பளத்தில் 5 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும்
-
'அளப்பறிய அன்பை உணர்ந்தேன்' பிரதமர் சந்திப்புக்கு பின் நயினார்
-
இணைய தொடர்பு சேவைக்கான செயற்கைக்கோள்களை ஏவிய அமேசான்
-
வீடு புகுந்து எஸ்.ஐ., கணவரை தாக்கி 10 சவரன் கொள்ளை
-
கழிவு சாம்பல் கொடுத்து ஏமாற்றிய சுடுகாடு ஊழியர்கள் தப்பியோட்டம்
-
சட்ட கல்வியில் தலையிடாதீர்கள்; பார் கவுன்சிலுக்கு கோர்ட் கண்டிப்பு
-
கம்பன் அரசு பள்ளியில் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி