நாடக மேடை திறப்பு விழா

அவலுார்பேட்டை : மேலச்சேரியில் புதிதாக கட்டிய நாடக மேடை திறப்பு விழா நடந்தது.

மேல்மலையனுார் அடுத்த மேலச்சேரி கிராமத்தில் செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியின் கீழ் 8 லட்சம் ரூபாய் மதிப்பில் நாடக மேடை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மஸ்தான் எம்.எல்.ஏ., புதிய நாடக மேடையை திறந்து வைத்தார். ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், ரவிச்சந்திரன், ஊராட்சி தலைவர் கோவிந்தம்மாள் மணி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement