கிரைம் செய்திகள்...விழுப்புரம்
பெண் பலி: போலீஸ் விசாரணை
கள்ளக்குறிச்சி விநாயகா நகரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரன் மனைவி லட்சுமி பிரியா, 35; இவர், கடந்த 11ம் தேதி காலை பிரசவத்திற்காக கள்ளக்குறிச்சியில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை முறையில் இரட்டை குழந்தை பிறந்தது. சில மணி நேரங்களுக்கு பிறகு லட்சுமி பிரியாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மேல்சிகிச்சைக்காக கடந்த 13ம் தேதி புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், 25ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிலம் சேர்க்கப்பட்டு அங்கு அவர் 27ம் தேதி இறந்தார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
மாணவி மாயம்: போலீஸ் விசாரணை
அனந்தபுரம் அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது தாய் இறந்து விட்டதால் தாத்தா, பாட்டியுடன் வசித்து வருகிறார். கடந்த 26ம் தேதி தனது தாத்தாவுடன் அனந்தபுரத்தில் உள்ள வங்கிக்கு கணக்கு துவங்க வந்தவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிந்து சிறுமியை தேடி வருகின்றனர்.
ஆட்டோ கவிழ்ந்து 4 பேர் காயம்
செஞ்சி அடுத்த பாடிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விசுவாசமேரி, 75; இவர், தனது உறவினர்களுடன் நேற்று முன்தினம் அதிகாலை 3:30 மணிக்கு, ஆலம்பூண்டியிலிருந்து பாடிபள்ளத்திற்கு ஆட்டோவில் சென்றார். தேவதானம்பேட்டை வனதுர்க்கை அம்மன் கோவில் ஆர்ச் அருகே சாலையோரம் குவித்து வைத்திருந்த நெல் குவியல் மீது ஆட்டோ மோதி கவிழ்ந்தது. இதில் விசுவாசமேரி, அவரது உறவினர்கள் ஜான் மசாபியல், சுகுமார், ஜோதி ஆகியோர் காயமடைந்தனர். சத்தியமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாலிபர் மாயம்
அனந்தபுரம் அடுத்து பனமலை மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 37; திருமணமாகாதவர். இவர் சம்பவத்தன்று மாலை 4:00 மணிக்கு, வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது மொபைல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு
திண்டிவனம், ஜெயபுரம் 2வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது சகோதரர்கள் ராஜரத்தினம், வேதபுரி. இவர்களுக்கிடையே சொத்து பிரச்னை உள்ளது. கடந்த 27ம் தேதி மாலை 3:00 மணிக்கு, செந்தில்குமார் வீட்டிற்குள் புகுந்து, எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் செந்தில்குமார் மனைவி ஆதிலட்சுமி, 52; மகன் பொன்னம்பலம், 22; ஆகியோரை தாக்கினர். புகாரின்பேரில், ராஜரத்தினம், 59; நந்தினி, 30; அரிபிரியா, 27; வேதபுரி, 58; பவன்குமார், 24; ஆகிய 5 பேர் மீது டவுன் போலீஸ் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
பைக் விபத்தில் மாணவர் பலி
கண்டாச்சிபுரம் அடுத்த கோட்டமருதுார் குப்பன் மகன் சஞ்சய், 23; சென்னை மதுரவாயில் கல்லுாரியில், பி.பி.ஏ., 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர், தனது கல்லுாரி நண்பர் மாதேஷ், 23; என்பவருடன், யமாகா எப்இசட் பைக்கில் வால்பாறை சென்றவர் கடந்த 27ம் தேதி சென்னை திரும்பினர். பைக்கை சஞ்சய் ஓட்டினார். பிற்பகல் 3:00 மணிக்கு முண்டியம்பாக்கம் வழுதாவூர் கூட்ரோடு அருகே வந்தபோது, முன்னால் சென்ற வேன் மீது மோதியதில், இருவரும் காயமடைந்தனர். உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு சஞ்சய் இறந்தார். விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஆசிரியை தற்கொலை
விழுப்புரம் சுதாகர் நகரைச் சேர்ந்தவர் சிவானந்தம் மனைவி கனகவள்ளி, 37; நன்னாடு அரசு பள்ளி ஆசிரியை. நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில், மனமுடைந்த கனகவள்ளி, நேற்று முன்தினம் காலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற்றவர் கைது
விக்கிரவாண்டி சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் வீடூர் பகுதியில் ரோந்து சென்றனர். வீடூர் பள்ளி அருகே கஞ்சா வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த அய்யனார் மகன் ராஜேஷ்,19; என்பவரை கைது செய்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பெண்ணை தாக்கிய 2 பேர் கைது
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.கொனவாடியைச் சேர்ந்தவர் வினோத்குமார், 35; இவர், தனது நண்பர் சிவபெருமாள் என்பவரின், சரக்கு வாகனத்தில் பள்ளியந்துார் சென்றார். மாம்பழப்பட்டு வீரன் மகன் கார்த்திக்ராஜா, 21; ஆறுமுகம் மகன் அருண்குமார், 20; ஆகியோர், குடிபோதையில் வினோத்குமார் சென்ற வேனை நிறுத்தி தகராறு செய்து தாக்கினர். தட்டிக்கேட்ட வினோத்குமார் மாமியார் சுமதி, 48; என்பவரையும் தாக்கினர். காணை போலீசார் வழக்குப் பதிந்து கார்த்திக்ராஜா, அருண்குமாரை கைது செய்தனர்.
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
கிளியனுார் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் தர்மலிங்கம், 55; கூலித் தொழிலாளி. நேற்று காலை 8:30 மணிக்கு வீட்டில் மின்விசிறி சுவிட் போட முயன்றார். அப்போது, மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார். கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தொழிலாளி தற்கொலை
புதுச்சேரி, சந்தைபுதுக்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுதாகர், 45; சலவைத் தொழிலாளி. கடந்த 10 ஆண்டுகளாக தனது மனைவி, மகன்களை விட்டு பிரிந்து, தைலாபுரத்தில் உள்ள வீட்டில் தங்கி, சலவைத் தொழில் செய்து வந்தார்.
நேற்று காலை வீட்டில் இருந்த சுதாகர் துாக்கு போட்டு கொண்டார். உடன், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார். அவரது தற்கொலைக்கு காரணம் குறித்து கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கிணற்றில் தவறி விழுந்தவர் பலி
உளுந்துார்பேட்டை அடுத்த ஏ.சாத்தனுாரைச் சேர்ந்தவர் திருமுருகன், 30; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் காலை இயற்கை உபாதை கழிக்கச் சென்றவர் கிணற்றுக்குள் இறங்கியபோது தவறி உள்ளே விழுந்தார். எடைக்கல் போலீசர் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று, மாலை 5:45 மணியளவில் திருமுருகனின் உடலை மீட்டனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கஞ்சா விற்றவர் கைது
மூங்கில்துறைப்பட்டு அடுத்த குமாரமங்கலத்தில் நேற்று முன்தினம் வட பொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஆற்று பாலத்தின் கீழ் கஞ்சா விற்ற அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை, 46; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 145 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பஸ் மோதி முதியவர் பலி
பண்ருட்டி அடுத்த ஆண்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பரமணியன், 60; விழுப்புரம் வந்திருந்த அவர், கடந்த 25ம் தேதி, விழுப்புரம் முத்தோப்பு பகுதி அருகே நடந்து வந்து சென்னை சாலையை கடக்க முயன்றார். அப்போது, சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குந் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
-
மேலே பாம்பு,கீழே நரிகள்; குதித்தால் அகழி, ஓடினால் தடுப்புச்சுவர் தடைகளை தாண்டி சாதித்ததாக முதல்வர் பெருமிதம்
-
'அளப்பறிய அன்பை உணர்ந்தேன்' பிரதமர் சந்திப்புக்கு பின் நயினார்
-
இணைய தொடர்பு சேவைக்கான செயற்கைக்கோள்களை ஏவிய அமேசான்
-
வீடு புகுந்து எஸ்.ஐ., கணவரை தாக்கி 10 சவரன் கொள்ளை
-
கழிவு சாம்பல் கொடுத்து ஏமாற்றிய சுடுகாடு ஊழியர்கள் தப்பியோட்டம்