பிராமணர் சமுதாய தகனக் கொட்டகை; புனரமைப்பு பணி துவக்கம்

புதுச்சேரி : கருவடிக்குப்பம் மயானத்தில் உள்ள பிராமணர் சமுதாய தகனக் கொட்டகை புனரமைப்பு பணி நேற்று பூமி பூஜையுடன் துவங்கியது.

கருவடிக்குப்பம் மயானத்தில் உள்ள பிராமணர் சமுதாயத்திற்கான தகனக் கொட்டகை சேதமடைந்துள்ளது. அதனை, பாரத பண்பாட்டு அமைப்பான வேதபாரதி, புனரமைக்கும் பணியை முன்னெடுத்துள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.

புதுச்சேரி 'தினமலர்' வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன், ஆசீர்வாத் அசோசியேட்ஸ் நிர்வாக இயக்குனர் ரமேஷ் ஆகியோர் பூமி பூஜை செய்து, புனரமைப்பு பணியை துவக்கி வைத்தனர்.

பூஜைகளை ராஜா சாஸ்திரிகள், கீதாராம் குருக்கள் செய்தனர். பூஜையில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பூஜை ஏற்பாடுகளை வேதபாரதியின் புதுச்சேரி தலைவர் பட்டாபிராமன், பொதுச் செயலாளர் நடராஜன், பொருளாளர் ரவிச்சந்திரன், நிர்வாகிகள் கணேசன், சந்திரசேகரன், வேதராமன், ரமேஷ், கணேஷ், வெங்கடேசன், கவுரிசங்கர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தற்போது துவங்கப்பட்டுள்ள தகனக் கொட்டகை அமைக்கும் பணியை துரிதப்படுத்தி, விரைவாக செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement