கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் மரவள்ளி கிழங்கு சாகுபடி பணி


கிருஷ்ணராயபுரம்:
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சப்
பட்டி, வீரியபாளையம், வயலுார், புனவாசிப்பட்டி, மத்திப்பட்டி, கணக்கம்பட்டி, சரவணபுரம், பாப்பகாப்பட்டி, சிவாயம், வேப்பங்குடி, குழந்தைபட்டி, வரகூர், வேங்காம்பட்டி ஆகிய பகுதிகளில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்துள்ளனர். தற்போது கிழங்கு குச்சிகள் நடவு செய்து, களைகள் அகற்றப்பட்டு கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது, கிழங்கு குச்சிகள் பசுமையாக வளர்ந்து வருகிறது. வறட்சியை தாங்கி, செடிகள் பசுமையாக வளர்ந்து வருவதால் விவசாயிகள் மரவள்ளி கிழங்கு சாகுபடிக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர்.

Advertisement