வாகன விற்பனையாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தேனி; தேனி வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில், மோட்டார் வாகன ஆலோசகர்கள் நலச்சங்கம், கார் விற்பனையாளர்கள் நலச்சங்கம், இருசக்கர வாகன விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில், 'வட்டார போக்குவரத்து அலுவலக நடைமுறைகள் கணினி மயக்கமாக்கப்பட்ட நிலையில் கால தாமதம் ஏற்படுத்துவதன் காரணம் கூற வேண்டும். ஸ்மார்ட் கார்டு இல்லை என ஆர்.சி., புக்கை அனுப்ப மறுப்பதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனியில் நடந்த ஆரப்பாட்டத்திற்கு மாவட்ட கார் விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.

மாநில துணைத் தலைவர் மாரியப்பன், மாவட்டச் செயலாளர் முருகன், கவுரவத் தலைவர் ராமசாமி, துணைசெயலாளர் பாலாஜி, துணைத் தலைவர்கள் ஆறுமுகம், சிவககுமார், இருசக்கர வாகன விற்பனையாளர்கள் நலச் சங்கத மாவட்டத் தலைவர் பிரகாஷ்,செயலாளர் கணேசன், பொருளாளர் செல்வக்குமார், இணைச் செயலாளர் ரஞ்சித்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement