மாநில வலு துாக்கும் போட்டி; போடி மாணவர்கள் சாதனை

போடி; மாநில வலு தூக்கும் போட்டியில் போடி மாணவர்கள் 2 ம் இடம் பெற்று சாதனை படைத்து உள்ளனர்.

தமிழ்நாடு வலு தூக்கும் சங்கம், கோவை மாவட்ட வலு தூக்கும் சங்கமும் இணைந்து மாநில அளவிலான வலு தூக்கும் போட்டி கோவையில் நடந்தது. 800 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் போடி நீலமேகம் பிள்ளை அகடாமி மாணவர்கள் 2 ம் இடம் பெற்று சிறந்த குட் லிப்டருக்கான விருதை பெற்று சாதனை படைத்து உள்ளனர்.

பெண்களுக்கான சப் ஜூனியர் 63 கிலோ எடை பிரிவில் சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பாண்டிமீனா, 69 கிலோ எடை பிரிவில் மாணவி துர்கைவேணி 3 ம் இடம் பெற்று வெண்கலப் பதக்கம் பெற்றனர். 74 கிலோ எடை பிரிவில் போடி பங்கஜம் நடுநிலைப்பள்ளி மாணவி விஷாலி 2 ம் இடம் பெற்று வெள்ளி பதக்கமும், 84 கிலோ எடை பிரிவில் இப் பள்ளி மாணவி தங்கேஸ்வரி 2 ம் இடம் பெற்று வெள்ளி பதக்கமும் பெற்றார்.

சிறந்த பவர் லிப்டர்கள்



ஆண்கள் சப் ஜூனியர் 94 கிலோ எடை பிரிவில் போடி 7 வது வார்டு நகராட்சி பள்ளி மாணவர் நாவலன் 3 ம் இடம் பெற்று வெண்கலம் வென்றார். 47 கிலோ எடை பிரிவில் போடி சிசம் மெட்ரிக் பள்ளி மாணவர் கோபிநாத், 50 கிலோ எடை பிரிவில் போடி சவுடாம்பிகா நடுநிலைப்பள்ளி மாணவர் கவிபாரதி, 52 கிலோ எடை பிரிவில் சிசம் மெட்ரிக் பள்ளி மாணவர் கோகுல் பாலன், 59 கிலோ எடை பிரிவில் தேனி வேலம்மாள் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர் ஜெய்தீப், 69 கிலோ எடை பிரிவில் போடி ஜ.கா.நி., பள்ளி மாணவர் அருண்பாண்டியன் ஆகியோர் சிறந்த பவர் லிப்டராக தேர்வு செய்யப்பட்டனர்.

ஜூனியர், சீனியர் ஆண்களுக்கான 120 கிலோ எடை பிரிவில் போடி வி.என்.பி., அகடாமியை சேர்ந்த மாஸ்டர் மோனீஸ்வர் 3 ம் இடம் பெற்று வெண்கலப் பதக்கம் பெற்றார்.

வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட வலு தூக்கும் சங்கத் தலைவர் குமார், செயலாளர் நீலமேகம், மாஸ்டர்கள் சொக்கர்மீனா, தீபன் சக்கரவர்த்தி, நவநீதன், பெஸ்கி கணேஷ் ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.

Advertisement