சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் 15 வயது சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 20ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருப்புல்லாணி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி.பெற்றோர் இறந்து விட்டதால் பாட்டி பராமரிப்பில் உள்ளார்.சிறுமியுடன் நெருங்கி பழகிய அதே பகுதியை சேர்ந்த சேதுராஜன் 32, என்பவர் 2022 ஏப்., 7ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போய் தரிசனம் செய்து வரலாம் என கூறினார்.

இதை நம்பி வந்த சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ வழக்கில் திருப்புல்லாணி போலீசார் சேதுராஜனை கைது செய்தனர். விசாரணை ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்தது.

இதில் சேதுராஜனுக்கு சிறுமியை கடத்தி சென்றதற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.2000 அபராதம், போக்சோ வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.5000 அபராதமும் விதித்து நீதிபதி கவிதா தீர்ப்பளித்தார். தண்டனையைஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் கீதா ஆஜரானார்.

Advertisement