பாக். வான்வெளி மூடல் எதிரொலி: 5 நாட்களில் திருப்பி விடப்பட்ட 600 விமானங்கள்

புதுடில்லி: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டதால் 5 நாட்களில் 600 இந்திய விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
ஜம்முகாஷ்மீரின் பஹல்காமில் ஏப்.22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பது தெரிய வந்துள்ள நிலையில் அந்நாட்டுக்கு எதிரான பல நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
தாக்குதலை தொடர்ந்து ஏப். 24 முதல் பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டது. தற்போது கடநத 5 நாட்களில் மட்டும் இந்திய விமான நிறுவனங்களின் 600 விமானங்கள் திருப்பி விடப்பட்டு இருக்கின்றன. இந்த விமானங்கள் சர்வதேச நாடுகளுக்கு செல்பவையாகும்.
இது தவிர, பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் 120 விமானங்கள் எரிபொருள் நிரப்ப ஏதுவாக கூடுதல் நிறுத்தங்களை மேற்கொள்ள வேண்டி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் லஷ்கர் முக்கிய புள்ளி: என்.ஐ.ஏ., விசாரணையில் உறுதி
-
பயங்கரவாத தாக்குதல்: மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை குழு ஆலோசனை
-
எதிர்க்கட்சி கூட்டணியை ஒரு கை பார்ப்போம்: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
தமிழகத்தில் இருந்து கடத்தல்; ரூ.9.6 கோடி கஞ்சாவை பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை
-
தே.மு.தி.க. பொறுப்புகளில் திடீர் மாற்றம்: பெயர் மாறி இளைஞரணி செயலாளரான விஜய பிரபாகர்
-
சரக்குகளை விரைந்து கையாளும் திட்டம்; ஓசூர், மதுரையில் செயல்படுத்த ஆய்வு