பெற்றோர் அறிவுரை: வாலிபர் தற்கொலை

கோலார்: கோலார் முல்பாகல் டவுன் கும்பாரபாளையா கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ், 29. இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களாக கணேஷ் வேலைக்கு செல்லாமல், தன் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வந்துள்ளார்.

'ஒழுங்காக வேலைக்குச் சென்று மனைவி, குழந்தையை பார்த்துக் கொள்' என்று கணேஷுக்கு, அவரது பெற்றோர் கண்டிப்புடன் அறிவுரை கூறி உள்ளனர். இதனால் அவர் மனம் உடைந்தார்.

வீட்டில் அனைவரும் துாங்கியதும், ஒரு அறையில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை பெற்றோர், மனைவி எழுந்து பார்த்தபோது கணேஷ் தற்கொலை செய்தது தெரிந்தது. முல்பாகல் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement