மதுபாட்டில்கள் விற்றவர் கைது

குள்ளஞ்சாவடி; மதுபாட்டில்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். குள்ளஞ்சாவடி, அங்காளம்மன் கோவில் அருகில் சந்தேகத்திற்கிடமாக நின்றவரை பிடித்து விசாரித்தனர். குள்ளஞ்சாவடியைச் சேர்ந்த பிரதாப், 31; என்பதும், மதுபாட்டில்கள் விற்பனை செய்வதும் தெரிந்தது.

உடன், போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement