மாவட்டத்தில் நாளை மதுக்கடைகள் விடுமுறை

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் மே தினத்தையொட்டி நாளை (1ம் தேதி) அனைத்து மதுபான விற்பனைக் கடைகளை மூட வேண்டுமென, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

தொழிலாளர் தினம் நாளை 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு உத்தரவின்படி நாளை கடலுார் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து எப்.எல்-1 எனப்படும் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், சில்லரை விற்பனைக் கடைகள் எப்.எல்-2, எப்.எல்-3, எனப்படும் உரிமம் பெற்று இயங்கும் தனியார் மனமகிழ் மன்றங்கள், தனியார் மதுபானக் கூடம் உள்ளிட்ட அனைத்து விற்பனைக் கூடங்களிலும் மதுபானம் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளதால் கடைகளை மூட வேண்டும்.

அன்றைய தினம் அரசு உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் தனியார் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement