உயர் நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் ஓய்வு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளில், இன்று ஒருவரும், மே மாதம் ஐந்து பேரும் ஓய்வு பெறுவதால், உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை, 60 ஆக குறைகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை, 75. தற்போது உள்ள, 65 நீதிபதிகளில், ஒருவர் இன்றும், நான்கு பேர் மே மாதமும் ஓய்வு பெறுகின்றனர். இன்று நீதிபதி ஆர்.ஹேமலதா; மே, 2ம் தேதி நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர்; 9ல், நீதிபதி ஏ.ஏ.நக்கீரன்; 16ல், நீதிபதி வி.பவானிசுப்பராயன்; 31ல், நீதிபதி வி.சிவஞானமும் பணி ஓய்வு பெறுகின்றனர்.

இவர்கள் ஐந்து பேருக்கும், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், இன்று மாலை பிரிவு உபசார விழா நடக்கிறது. உயர் நீதிமன்றத்துக்கு, மே 1 முதல் ஜூன் வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால், விடுமுறைக் காலத்தில் ஓய்வு பெறும் நீதிபதிகளுக்கு, கடைசி பணி நாளான. இன்று பிரிவு உபசார விழா நடக்கிறது.

ஐந்து நீதிபதிகள் ஓய்வை அடுத்து நீதிபதிகள் காலியிடம், 15 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement