'பிரவாஹ்' தளத்தை மட்டுமே பயன்படுத்த வங்கிகளுக்கு உத்தரவு

புதுடில்லி : வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட ஒழுங்குபடுத்தப்பட்ட நிதி நிறுவனங்கள் அனைத்தும், ஒழுங்குமுறை ஒப்புதல்கள் பெற, 'பிரவாஹ்' தளத்தை மட்டுமே நாளை முதல் பயன்படுத்த வேண்டும் என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியிடம், ஒழுங்குமுறை ஒப்புதல் பெறுவது உள்ளிட்ட காரணங்களுக்காக ஆண்டுதோறும் எண்ணற்ற விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன.

இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான நடைமுறையை எளிதாக்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், ரிசர்வ் வங்கி, கடந்த ஆண்டு பிரவாஹ் தளத்தை அறிமுகப்படுத்தியது.

இதுவரை, ஒப்புதல் பெறுவதற்காக 4,000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், இன்னும் பல நிறுவனங்கள் நேரடியாகவும், பழைய நடைமுறையை பின்பற்றியும், விண்ணப்பித்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து, ஒப்புதல் பெற, வரும் மே 1ம் தேதி முதல் பிரவாஹ் தளத்தின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

Advertisement