ஐ.சி.எல்., பின்கார்ப் நிறுவன என்.சி.டி.,யில் முதலீடு வாய்ப்பு

புதுடில்லி : அதிகபட்சம் 13.01 சதவீத வருவாய் தரக்கூடிய, 'ஐ.சி.எல்., பின்கார்ப்' நிறுவனத்தின் புதிய என்.சி.டி., எனும் டிபெஞ்சரில், வருகிற மே 9ம் தேதி வரை முதலீடு செய்யலாம்.
முன்னணி நிதி நிறுவனமான, ஐ.சி.எல்., பின்கார்ப், பாதுகாப்பான, திரும்பப் பெறத்தக்க, பங்குகளாக மாற்ற இயலாத முதலீட்டுப் பத்திரத்தை, கடந்த 25ம் தேதி வெளியிட்டது. 1,000 ரூபாய் முகமதிப்பு கொண்ட இந்த பத்திரத்தில், குறைந்தபட்சமாக 10,000 ரூபாய் முதலீடு செய்யலாம். 11 முதல் 12.25 சதவீதம் வட்டி விகிதம் கிடைக்கக்கூடிய இந்த பத்திரங்களின் முதிர்வு காலத்தில் அதிகபட்ச வருவாய் 13.01 சதவீதமாக இருக்கும்.
இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ள நிலையில், வாடிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பான, அதிக வருவாய் கிடைக்கக்கூடிய வகையில், இந்த என்.சி.டி., வெளியிடப்பட்டுள்ளதாக ஐ.சி.எல்., பின்கார்ப் தெரிவித்துள்ளது.
மேலும்
-
அழகிய தமிழ்ப்பெயர்களை அறிய இணையப்பக்கம்; துவங்குகிறது தமிழக அரசு!
-
எல்லையில் ட்ரோன் எதிர்ப்பு ஆயுதங்கள் தயார்; பாக்., கடத்தல் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி!
-
பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் லஷ்கர் முக்கிய புள்ளி: என்.ஐ.ஏ., விசாரணையில் உறுதி
-
பயங்கரவாத தாக்குதல்: மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை குழு ஆலோசனை
-
எதிர்க்கட்சி கூட்டணியை ஒரு கை பார்ப்போம்: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
தமிழகத்தில் இருந்து கடத்தல்; ரூ.9.6 கோடி கஞ்சாவை பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை