மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 33 மாதங்களில் இல்லாத உயர்வு

புதுடில்லி : இந்தியாவின் கம்ப்யூட்டர் மற்றும் மின்னணு பொருட்களின் உற்பத்தி, கடந்த மார்ச் மாதத்தில், 33 மாதங்களில் இல்லாத அளவுக்கு 21.50 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது முந்தைய மாதத்தில் 11.20 சதவீதமாக இருந்தது என்று அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

வலுவான தேவை, டிரம்ப் வரி விதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள, ஏற்றுமதி விரைவுபடுத்தப்பட்டது ஆகியவை காரணமாக ஏற்றுமதி அதிகரித்தது.

ஏற்றுமதியில் பங்களிப்பு



(2025 மார்ச் நிலவரம்)

கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ்: 21.50%

இயந்திரங்கள், உபகரணங்கள்: 8%

வாகனங்கள், டிரெய்லர்கள்: 10.30%

மின்சார பொருட்கள்: 15.70%

Advertisement