கமலா கல்வியியல் கல்லுாரியில் கலை கலாசார நிகழ்ச்சி

விழுப்புரம்; திருநாவலுார் கமலா கல்வியியல் கல்லுாரியில், கலை கலாசார விழா மற்றும் பி.எட்., இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு பிரிவு உபசாரவிழா நடந்தது.
கல்லுாரி செயலாளர் பிரபாகர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். தாளாளர் கமலா ஜோசப், சிறந்த ஆசிரியர்களாக கல்லுாரிக்கும், சமுதாயத்திற்கும் சிறப்பான பங்களிப்பை அளிக்க வேண்டும் என வாழ்த்து கூறினார். இயக்குனர் ஏஞ்சல் ஜாஸ்மின் ஷெர்லி முன்னிலைவகித்தார். டீன் கதிர்வேல்,திறமையான ஆசிரியர்களாக இருந்தால் மட்டுமே சமூகத்தில் ஜெயிக்க முடியும். நீங்கள் சிறந்த ஆசிரியராக வர வேண்டும் என தெரிவித்தார்.
டாக்டர் கவாஸ்கர், இயக்குனர் ஜோசப் ஜோஷ்வா கிப்சன், ஜோஹான்சன், விக்டர் மோசஸ், டாக்டர் பால்ராஜ், கமலா கல்வியியல் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, துணை முதல்வர் ரவிவர்மன் உட்பட பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். கலை கலாசார போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. இறுதியாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
மேலும்
-
57 முறை டிரான்ஸ்பர் ஆன ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக் கெம்கா இன்று பணி ஓய்வு
-
பாக். வான்வெளி மூடல் எதிரொலி: 5 நாட்களில் திருப்பி விடப்பட்ட 600 விமானங்கள்
-
பா.ஜ., - த.வெ.க., கூட்டணி குறித்து தெரியாது; நயினார் நாகேந்திரன் பதில்!
-
36 மணி நேரத்திற்குள் சர்ஜிக்கல் ஸ்டிரைக்: அலறும் பாக்., அமைச்சர்
-
பெற்றோர் அறிவுரை: வாலிபர் தற்கொலை
-
அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்க போறீங்களா? இன்றைய நிலவரம் இதோ!