'மாஜி' அமைச்சர் மீதான வழக்கில் உத்தரவை மாற்ற முடியாது: நீதிபதி திட்டவட்டம்

சென்னை: வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கை, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கும்படி பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி.
இவர் வாயிலாக, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சாத்துாரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவரிடம், அ.தி.மு.க., முன்னாள் பிரமுகர் விஜய நல்லதம்பி, பல்வேறு தவணைகளில், 30 லட்சம் ரூபாய் வரை பெற்று உள்ளார். வேலை பெற்றுத் தராததால், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் ரவீந்திரன் புகார் அளித்தார்.
அதன்படி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2021 முதல் நிலுவையில் உள்ள வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி, ரவீந்திரன் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 'குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதோடு, இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவு அமல்படுத்தப்படாததால், வழக்கு விசாரணையை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கும்படி, நீதிபதி பி.வேல்முருகன் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை மாற்றியமைக்கக் கோரி, காவல் துறை தரப்பில் தாக்கல் செய்த மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றியதை எதிர்த்து தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதால், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைக்க முடியாது' எனக்கூறி, காவல் துறை தரப்பில் தாக்கல் செய்த மனுவை நிராகரித்து, நீதிபதி உத்தரவிட்டார்.






மேலும்
-
'பேட்டியா கண்காட்சி' மே 2ம் தேதி துவக்கம்
-
மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 33 மாதங்களில் இல்லாத உயர்வு
-
சுய ஒழுக்கம், கட்டுப்பாடு முக்கியம்; தொண்டர்களுக்கு விஜய் கண்டிப்பு
-
ஓலா விற்பனை சர்ச்சை: செபி விசாரணை துவக்கம்
-
ஐ.சி.எல்., பின்கார்ப் நிறுவன என்.சி.டி.,யில் முதலீடு வாய்ப்பு
-
இண்டஸ்இண்ட் வங்கி சி.இ.ஓ., ராஜினாமா