'பேட்டியா கண்காட்சி' மே 2ம் தேதி துவக்கம்

ஈரோடு : ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 'பேட்டியா பேர் 2025' கண்காட்சி ஈரோடு, பெருந்துறை சாலை, பரிமளம் மஹாலில் வரும் மே, 2 முதல் 5 வரை நடக்க உள்ளது.
இதுபற்றி பேட்டியா தலைவர் ராஜமாணிக்கம், கண்காட்சி தலைவர் ஜெப்ரி கூறியதாவது:
இக்கூட்டமைப்பில் உள்ள சங்கங்கள், அரசு துறைகள், பொது அமைப்புகள், தொழில் முனைவோர் என பல்வேறு தரப்பினர் வாயிலாக 220 ஸ்டால்கள் அமைக்கப்படும்.
மத்திய, மாநில அரசுகளின் மானிய உதவியுடன், 110 தொழில்முனைவோர் ஸ்டால்கள் அமைக்கின்றனர்.
வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் கண்காட்சியை திறந்து வைத்து, மலரை வெளியிடுகின்றனர். எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
ஜவுளி, வீட்டு உபயோக பொருட்கள், தங்கம், வெள்ளி நகைகள், மகளிர் அணிகலன்கள், வேளாண் பொருட்கள், இ - வாகனங்கள், உணவு திருவிழா, குழந்தைகளுக்கான அம்சங்கள் என பலவும் இடம் பெறுகின்றன. தினமும் காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை கண்காட்சி செயல்படும். மே 5 மாலை 6:00 மணிக்கு நிறைவு விழா நடைபெற உள்ளது.
இவ்வாறு கூறினார்.
மேலும்
-
பயங்கரவாத தாக்குதல் எதிரொலி; தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு மாற்றி அமைப்பு
-
சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்கள்: வெளியேற்றும் நடவடிக்கை தமிழகத்தில் தொடக்கம்!
-
அழகிய தமிழ்ப்பெயர்களை அறிய இணையப்பக்கம்; துவங்குகிறது தமிழக அரசு!
-
எல்லையில் ட்ரோன் எதிர்ப்பு ஆயுதங்கள் தயார்; பாக்., கடத்தல் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி!
-
பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் லஷ்கர் முக்கிய புள்ளி: என்.ஐ.ஏ., விசாரணையில் உறுதி
-
பயங்கரவாத தாக்குதல்: மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை குழு ஆலோசனை