சித்தராமையா கோபம் பா.ஜ., கடும் தாக்கு

பெங்களூரு: 'முதல்வர் நாற்காலி காலியாகும் காலம் நெருங்கி வருவதால், சித்தராமையா விரக்தி அடைந்துள்ளார்' என, 'எக்ஸ்' பக்கத்தில் மாநில பா.ஜ., கண்டித்துள்ளது.

பெலகாவியில் போலீஸ் அதிகாரியை அடிக்க கை ஓங்கிய முதல்வர் சித்தராமையாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, நேற்று பா.ஜ., கூறியுள்ளதாவது:

முதல்வர் நாற்காலி காலியாகும் காலம் நெருங்கி வருவதால், சித்தராமையா விரக்தி அடைந்துள்ளார். தங்கள் குடும்பத்தில் இருப்பவர்களை திட்டுவது போன்று, பொது இடத்தில் போலீஸ் அதிகாரியை அடிக்க கை ஓங்கி உள்ளார்.

பொது இடத்தில் பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வது; அரசு அதிகாரிகளை திட்டுவது, அவர் வகிக்கும் முதல்வர் பதவிக்கு அழகல்ல. முதல்வர் சித்தராமையாவின் முரட்டுத்தனத்துக்கு ஒரு முடிவு இல்லையா? உங்கள் பெயருக்கு முன்னாள், ரவுடி என்று ஏன் சேர்க்கக் கூடாது?

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

Advertisement