'உங்கள் வீட்டு வாசலில்' விழிப்புணர்வு மகளிர் கமிஷனிடம் பெண்கள் முறையீடு

மைசூரு: பெண்கள் பாதிப்புக்குள்ளான புகார்கள் தொடர்பாக அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, பெண்களுக்கான தேசிய மகளிர் கமிஷன் விசாரித்தது.
மைசூரு மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று மைசூரு தேசிய மகளிர் கமிஷன் சார்பில் 'பெண்களுக்கான தேசிய மகளிர் கமிஷன், உங்கள் வீட்டு வாசலில்' விழிப்புணர்வு கூட்டம் மகளிர் கமிஷன் உறுப்பினர் அர்ச்சனா மஜும்தார் தலைமையில் நடந்தது.
அப்போது பெண் ஒருவர் கூறியதாவது:
என் பெற்றோருக்கு என்னுடன் சேர்ந்து நான்கு மகள்கள். இதில் ஒருவர், மாற்றுத்திறனாளி. இருவருக்கு திருமணம் நடந்துவிட்டது.
என்னையும், மாற்றுத்திறனாளி சகோதரியையும் பார்த்துக் கொள்வதாக, இரு அக்காக்களின் கணவர்கள் ஒப்புக் கொண்டனர்.
ஆனால் அவர்களில் ஒருவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் வெறுப்படைந்து அவர்களின் வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன். அதே வேளையில், கலப்பு திருமணம் செய்து கொண்டேன். ஆனாலும், அக்காவின் கணவர் தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார். என்னை பற்றி சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்.
அவரின் தொல்லையை சகோதரியிடம் தெரிவிக்க முயற்சித்தேன். ஆனால், அவர்கள் இருவரும் என் மீது சி.இ.என்., எனும் சைபர், பொருளாதாரம், போதை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு தலைவர் அர்ச்சனா மஜும்தார் பதிலளிக்கையில், ''உங்கள் சகோதரி கணவர் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்குப் பதிவு செய்யப்படும்.
சொத்து தொடர்பான பிரச்னையை, நீதிமன்றத்தில் முறையிடுங்கள்,'' என்றார்.
இதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர், 'இவ்வழக்கு தொடர்பாக பெங்களூரு எச்.எஸ்.ஆர்., லே - அவுட் போலீசில் ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. எங்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுத்திருப்போம்' என்றார்.
இதுபோன்று மாண்டியாவை சேர்ந்த ஒருவர், 'என் மகள் படிப்பை முடித்து, பெங்களூரில் பணிக்கு சென்றார். குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலையும் மாறியது. ஒரு நாள் பெங்களூரில் இருந்து எனக்கு மொபைல்போன் மூலம் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், 'உங்கள் மகள், ஐந்தாவது மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டார்' என்றார்.
போலீசாரும், இதை தற்கொலை என்று கோணத்தில் விசாரிக்கின்றனர். என் மகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மன தைரியம் இல்லாதவர் அல்ல. அவரை யாரோ கொலை செய்திருக்கலாம்' என்றார்.
அர்ச்சனா மஜும்தார், ''இது தொடர்பாக விசாரித்து, 15 நாட்களில் எனக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்,'' என்றார்.
இதுபோன்று பலர், தங்கள் குறைகளை தெரிவித்தனர்.
மேலும்
-
பயங்கரவாத தாக்குதல் எதிரொலி; தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு மாற்றி அமைப்பு
-
சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்கள்: வெளியேற்றும் நடவடிக்கை தமிழகத்தில் தொடக்கம்!
-
அழகிய தமிழ்ப்பெயர்களை அறிய இணையப்பக்கம்; துவங்குகிறது தமிழக அரசு!
-
எல்லையில் ட்ரோன் எதிர்ப்பு ஆயுதங்கள் தயார்; பாக்., கடத்தல் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி!
-
பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் லஷ்கர் முக்கிய புள்ளி: என்.ஐ.ஏ., விசாரணையில் உறுதி
-
பயங்கரவாத தாக்குதல்: மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை குழு ஆலோசனை