தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி மார்ச் மாதத்தில் சற்றே உயர்வு

புதுடில்லி: கடந்த மார்ச் மாதத்தில் நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 3 சதவீதமாக சற்றே அதிகரித்துள்ளது என, மத்திய புள்ளியியல் துறை அமைச்சகத்தின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது, முந்தைய பிப்ரவரி மாதத்தின் வளர்ச்சியை காட்டிலும் சிறிது அதிகம். பிப்ரவரி வளர்ச்சி முன்பிருந்த 2.90 சதவீதத்திலிருந்து, தற்போது 2.70 சதவீதமாக திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், கடந்தாண்டு மார்ச் மாதத்தின் 5.50 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த மாதம் வளர்ச்சி சரிந்துள்ளது.

சமீபத்தில் தொழில் துறை உற்பத்தி தொடர்பான தரவுகளை வெளியிடுவதற்கான கால வரையறையை, மத்திய அரசு ஆறு வாரங்களில் இருந்து நான்கு வாரங்களாக குறைத்தது. இதன்படி, முதல்முறையாக கடந்த மாதத்துக்கான தரவுகள் நான்கு வாரங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்தாண்டு மார்ச்சுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு மார்ச்சில் தயாரிப்பு, சுரங்கம், மின்சாரம் ஆகிய துறைகளின் வளர்ச்சி கணிசமாக குறைந்துள்ளது.

நிதியாண்டு ஒப்பீட்டில், 2024 - 25ம் நிதியாண்டில் சராசரி தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 4 சதவீதமாக குறைந்துள்ளது. இது, 2023 - 24ம் நிதியாண்டில் 5.90 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.





மாதங்கள் வளர்ச்சி (%)

2024 மார்ச் 5.50ஏப்ரல் 5.20மே 6.20ஜூன் 4.90ஜூலை 5.00ஆகஸ்ட் 0செப்டம்பர் 3.20அக்டோபர் 3.70நவம்பர் 5.00டிசம்பர் 3.502025ஜனவரி 5.20பிப்ரவரி 2.70மார்ச் 3.00

Advertisement