அரியலுாரில் சூரிய மின் உற்பத்தி; பிரைம்கோல்டு நிறுவனம் திட்டம்

புதுடில்லி; அரியலுாரில் 20 மெகாவாட் சோலார் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க, 'பிரைம் கோல்டு ஸ்டீல் அண்டு பவர்' நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
டில்லியை சேர்ந்த பிரைம்கோல்டு இன்டர்நேஷனல் நிறுவனம், ஸ்டீல், சிமென்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. பசுமை ஸ்டீல் உற்பத்தியில் ஈடுபடுவதற்காக தனது பெயரை 'பிரைம்கோல்டு ஸ்டீல் அண்டு பவர்' என இந்நிறுவனம் மாற்றி கொண்டுள்ளது.
ஏற்கனவே காற்றாலை மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம், நீண்ட கால புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒப்பந்தத்தில் கவனம் செலுத்தி வருகிறது. தற்போது அரியலுாரில் 20 மெகாவாட் திறன் கொண்ட சோலார் மின் உற்பத்தி நிலையத்தை நிறுவ திட்டமிட்டுள்ள பிரைம்கோல்டு, இதன் வாயிலாக உற்பத்தியாகும் துாய மின்சாரத்தை நேரடியாக சொந்த தேவைக்கு பயன்படுத்த உள்ளது.
இந்த திட்டத்துக்காக, தேவைப்படும் நிலத்தை ஏற்கனவே கையகப்படுத்தி உள்ள இந்நிறுவனம், இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையிடம் இருந்து 65 கோடி ரூபாய் நிதியைப் பெற்றுள்ளது.
மேலும்
-
பயங்கரவாத தாக்குதல் எதிரொலி; தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு மாற்றி அமைப்பு
-
சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்கள்: வெளியேற்றும் நடவடிக்கை தமிழகத்தில் தொடக்கம்!
-
அழகிய தமிழ்ப்பெயர்களை அறிய இணையப்பக்கம்; துவங்குகிறது தமிழக அரசு!
-
எல்லையில் ட்ரோன் எதிர்ப்பு ஆயுதங்கள் தயார்; பாக்., கடத்தல் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி!
-
பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் லஷ்கர் முக்கிய புள்ளி: என்.ஐ.ஏ., விசாரணையில் உறுதி
-
பயங்கரவாத தாக்குதல்: மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை குழு ஆலோசனை