செல்போன் பேச்சு விவகாரம்: 11வது மாடியில் இருந்து குதித்து பெண் உயிரிழப்பு

தானே: மஹராராஷ்டிராவில் செல்போனில் அதிக நேரம் பேசிய விவகாரத்தில் 20 வயது பெண் ஒருவர் 11வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்தார்.

மஹாராஷ்டிரா மாநிலம் தானேயில் அடுக்குமாடி குடியிருப்பில் 11 வது தளத்தில் சமிக்ஷா நாராயன் என்ற 20 வயது பெண் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு, சமிக்ஷா தான் வசிக்கும் 11வது மாடியிலிருந்து கீழே குதித்து உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து மன்படா போலீசார் கூறியதாவது:

சமிக்ஷா என்ற பெண், நேற்று இரவு தனது செல்போனில் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்ததாகவும், அந்த பெண்ணின் மாமா, பேச்சை நிறுத்தச் சொல்லியதோடு, அந்த பெண்ணின் செல்போனை எடுத்துச்சென்று விட்டதாகவும், அதன் பிறகு அவர், 11வது மாடியிலிருந்து குதித்து உயிரிழந்ததாகவும் அவரது மாமா புகாரில் தெரிவித்திருந்தார். கீழே விழுந்த அந்த பெண், பலத்த காயங்களோடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் அந்த பெண் இன்று இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து விபத்து மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணங்களை கண்டறிய அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்து வருகிறோம்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement