புதுக்கோட்டையில் கொலை குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நகைக்காக சொந்த சித்தி மகளை கொலை குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.



புதுக்கோட்டை பொன்நகரில் கடந்த 2021ம் ஆண்டு ஒன்னேகால் பவுன் தங்க நகைக்காக சொந்த சித்தி மகளான லோகப்பிரியா என்ற இளம் பெண்ணை கொடூரமாக கத்தியால் குத்தியும் இரும்பு ராடால் தாக்கியும் கொலை செய்த பெருந்துறை கிராமத்தைச் சேர்ந்த அவரது அண்ணன் லட்சுமணன் என்ற சுரேஷுக்கு, 32, தூக்கு தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சந்திரன் தீர்ப்பு வழங்கினார்.

Advertisement