பிரியங்கா கணவர் ராபர்ட் வாத்ரா மீது விசாரணை கோரி மனு: அலகாபாத் ஐகோர்ட் விசாரணை

பிரயாக்ராஜ்: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து உளறிக் கொட்டிய ராபர்ட் வாத்ராவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை நாளை மறுநாள்( மே 2) அலகாபாத் ஐகோர்ட் விசாரிக்க உள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதல்களில், 26 சுற்றுலா பயணியர் கொல்லப்பட்டனர். இது குறித்து, ராபர்ட் வாத்ரா கூறியதாவது: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு இரங்கல். இது, மூர்க்கத்தனமான நடவடிக்கை. தற்போது நாட்டில் உள்ள அரசு, ஹிந்துத்துவாவை பற்றியே பேசுகிறது. இதனால், சிறுபான்மையினர் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, பலகீனமடைந்துள்ளதாக கருதுகின்றனர்.
பஹல்காமில் நடந்த தாக்குதலின்போது, அடையாள அட்டைகளை சரிபார்த்து பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். ஏன் அவ்வாறு செய்தனர் என்று பார்க்க வேண்டும்.ஏனென்றால், இந்தியாவில் தற்போது ஹிந்து - முஸ்லிம் என்ற பாகுபாடு உள்ளது.
ஹிந்துக்களாலேயே நமக்கு தொந்தரவு என்று முஸ்லிம்களை சிந்திக்க வைத்து விடுகிறது. அதனால் தான், அடையாள அட்டையை பார்த்து கொன்றுள்ளனர். தாங்கள் பலகீனமடைந்து வருவதாக முஸ்லிம்கள் நினைக்கின்றனர். அதுவே, பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த தாக்குதல் சொல்லியுள்ள செய்தி எனக்கூறியிருந்தார். இதற்கு பா.ஜ., உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், ராபர்ட் வாத்ரா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சிறப்பு விசாரணைக் குழு அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கூறி அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ரஞ்சன் ராய் மற்றும் பிரகாஷ் சுக்லா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வர இருந்தது. ஆனால், விசாரிக்கப்படவில்லை. இந்த வழக்கை வரும் வெள்ளிக்கிழமை( மே2) அன்று விசாரிப்பதாக ஐகோர்ட் அறிவித்து உள்ளது.
மேலும்
-
சீமான் தலை இருக்காது: வலைதளத்தில் மிரட்டல்
-
பெங்களூரில் பீர் விலை 'விர்ர்ர்ர்ர்!'
-
தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு மாற்றம்
-
மின்சார வாகனங்களுக்கு மஹாராஷ்டிராவில் சலுகைகள்! வரி ரத்து, சுங்க வரியில் விலக்கு, மானியம் அறிவிப்பு
-
10 நிமிடத்தில் சிம் கார்டு டெலிவரி சேவை நிறுத்தம்
-
மிகப்பெரிய போர்க்கப்பலில் ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா