விவசாய மின் இணைப்பு வாரிய உத்தரவு நிறுத்தம்

சென்னை:தமிழக மின்வாரியம், விவசாயத்துக்கு இலவச மின்சாரம் வழங்குகிறது. இதற்கான செலவை தமிழக அரசு வழங்குவதால், ஒவ்வொரு ஆண்டும் அரசு அனுமதிக்கும் எண்ணிக்கையில், விவசாய மின் இணைப்பு வழங்கப்படுகிறது.

தற்போது வரை, விவசாய மின் இணைப்பு கேட்டு, 2 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. சில விவசாயிகள் நிலத்தில், சூரியசக்தி மின்சாரத்தில் இயங்கும், 'மோட்டார் பம்ப்' அமைத்து உள்ளனர்.

'விவசாயிகள் தாங்களாகவோ, அரசு மானிய உதவியிலோ சூரியசக்தி மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் பம்ப் அமைத்திருங்தால், விவசாய மின் இணைப்பு வழங்க வேண்டாம்' என, இம்மாதம், 12ல் மின்வாரியம் உத்தரவிட்டது.

இதற்கு, விவசாயிகளிடம் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, அந்த உத்தரவை நிறுத்தி வைக்குமாறு மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களிடம், மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement