சக்திமாரியம்மன் கோவிலில் அம்மன் தாலாட்டு உற்சவம்

சேத்தியாத்தோப்பு: அள்ளூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மகாசக்திமாரியம்மன்,செல்லியம்மன் ஆலயத்தில் சித்திரை தீமிதி விழா நடந்தது.

பத்துநாட்கள் நடந்த விழாவில் இறுதி நாளான நேற்று மூலவர் மகாசக்தி மாரியம்மனுக்கும், செல்லியம்மனுக்கும் பால், சந்தனம், இளநீர், தயிர், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் ஆன சிறப்பு அபிேஷகமும், உற்சவ சாமிகளுக்கும் அபிேஷகம் தீபாராதனை நடந்தது.

அதனை தொடர்ந்து இரவு 8.00 மணியளவில் மகாசக்திமாரியம்மன், செல்லியம்மன் ஆகிய சாமிகளை ஊஞ்சலில் வைத்து பம்பை, உடுக்கை முழங்க தாலாட்டு உற்சவம் நடந்தது.

இதில், பெண்கள், உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி வழிபாடு செய்தனர்.

Advertisement