கடலுார் அரசு மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை
கடலுார் : கடலுார் அரசு மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
கடலுார் செம்மண்டலம் மற்றும் வில்வநகரில் இயங்கி வரும் மாற்றுத் திறனாளிகள் பள்ளிகளில் 2025-26ம் கல்வி ஆண்டுக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கை நடக்கிறது. பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு அரசு தொடக்கப் பள்ளியிலும், செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு அரசு நடுநிலைப் பள்ளியில் சேர்க்கை நடக்கிறது.
பள்ளியில் 5 வயது முதல் 12 வயது வரை உள்ள பார்வையற்ற மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுவர். மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் 'பிரெய்லி' முறையில் கல்வி கற்பிக்கப்படுகிறது.
செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு அரசு நடுநிலைப் பள்ளியில் 3 வயது முதல் 15 வயது வரை உள்ள மாணவ, மாணவிகள் சேர்க்கை நடக்கிறது. இவர்களுக்கு செவித்துணைக் கருவிகள் மூலம் பேச்சு பயிற்சி அளித்து கல்வி கற்பிக்கப்படுகிறது.
சிறப்பு பள்ளி விடுதியில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச உணவு, உடை, இருப்பிடம் வழங்கப்படுகிறது.மேலும் மாணவர்களுக்கு இசைப் பயிற்சி, உடற்கல்வி, யோகா மற்றும் கணிணி பயிற்சி அளிக்கப்படும்.
கடலுார் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து பயன் அடையலாம். மேலும் விபரங்களுக்கு 8695383564, 944252687 மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
ஜெருசலேம் அருகே காட்டுத்தீ: இஸ்ரேல் தேசிய அவசர நிலை அறிவிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிவு!
-
நாடு கடத்தப்பட இருந்த பாக்., முதியவர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் நடப்பது சாமானியர்கள் ஆட்சி; மே தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
வர்த்தகப் போரில் சீனா அதிகமாக பாதிக்கப்படும்; அதிபர் டிரம்ப் கணிப்பு
-
கிருமிகளைக் கொல்லும் பூச்சு