கைலாசநாதர் கோவில் குளம் துார்வாரி சீரமைக்க கோரிக்கை

அய்யங்கார்குளம்:காஞ்சிபுரம் ஒன்றியம், அய்யங்கார்குளம் கிராமத்தில் பழமையான கைலாச நாதர் கோவில் உள்ளது.
ஹிந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள இக்கோவில் அருகில் கோவிலுக்கு சொந்த மான தெப்பக்குளம் முறையான பராமரிப்பு இல்லா மல், சீரழிந்த நிலையில் இருந்த இக்குளத்தைசீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்திவந்தனர்.
இதையடுத்து, கடந்த 2022ம் ஆண்டு ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், 23 லட்சம் ரூபாய் செலவில் குளம் முழுதும்துார்வாரப்பட்டு, குளத்திற்கு செல்லபடிகள் அமைக்கப்பட்டு குளக்கரை பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், கோவில் நிர்வாகம் குளத்தை முறையாக பராமரிக்காததால், குளத்தில் கோரை புற்கள்முளைத்தும், பாசி படர்ந்தும், குளத்து நீர்மாசடைந்து வருகிறது.
இதே நிலை நீடித்தால் குளத்தில் நீர்பிடிப்பு பகுதி முழுதும் கோரைப்புற்கள் காடுபோல வளரும் சூழல்உள்ளது. லட்சக்கணக்கான ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட குளம், இரண்டரை ஆண்டிலேயே கோரை புற்களால் சீரழிந்து வருகிறது.எனவே, கைலாசநாதர்கோவில் குளத்தில் வளர்ந்துள்ள கோரை புற்களை அகற்றி, குளத்தை சீரமைக்க ஹிந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்களிடையே கோரிக்கைஎழுந்துள்ளது.
மேலும்
-
ஏ.டி.எம்., கட்டண உயர்வு இன்று முதல் அமல்; பரிவர்த்தனைகளை நோட் பண்ணுங்க!
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; 3டி வரைபடம் மூலம் என்.ஐ.ஏ., விசாரணை!
-
சர்ச்சைக்குரிய 'கயாப்' பதிவு: நீக்கியது காங்கிரஸ்
-
பஹல்காம் தாக்குதலுக்கு ராணுவ தளபதி நீக்கமா? அரசு விளக்கம்
-
இந்தியாவும், பாகிஸ்தானும் பாதுகாப்பை பேணுங்கள்: அமெரிக்கா, ஐ.நா., வலியுறுத்தல்
-
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து எதிரொலி: வறண்டு கிடக்கின்றன பாக்., அணை