சேதமடைந்த மின்கம்பங்கள்; மாற்றியமைக்க வலியுறுத்தல்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகரில், சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில், மின் கோட்டத்திற்கு உட்பட்ட ஒவ்வொரு துணை மின்நிலையங்களில், மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இப்பணியின்போது, மின் கம்பிகள், மின் கம்பங்களின் உறுதித் தன்மை சரிபார்க்கப்படுகிறது.
இத்துடன், மின் கம்பிகள் செல்லும் பாதையில், இடையூறாக உள்ள மரம், செடி உள்ளிட்டவை அகற்றப்படுகின்றன. எனினும், சில பகுதிகளில், சிதிலமடைந்து ஆபத்தான நிலையில், மின் கம்பங்கள் காணப்படுகின்றன.
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் இளங்கோவீதி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள ரோடுகளில் சிதிலமடைந்த நிலையில் மின்கம்பங்கள் காணப்படுகின்றன. கான்கிரீட் பெயர்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அவற்றை மாற்றி, புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'மின்கம்பங்கள் சேதமடைந்தும், அவை மாற்றப்படாமல் உள்ளது. குடியிருப்புகள் நிறைந்த பகுதியாக உள்ளதால், விபத்துகளுக்கு அச்சாரமிடும் வகையில் உள்ளது.
இளங்கோ வீதி மட்டுமின்றி, மகாலிங்கபுரத்தில் ஆங்காங்கே உள்ள இரும்பு மின்கம்பங்களிலும் கீழ் பகுதி சேதமடைந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து, சிதிலமடைந்த மின் கம்பங்கள் மற்றும் கம்பிகளை மாற்றியமைக்க வேண்டும்,' என்றனர்.
மேலும்
-
தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு முயற்சியை அதிகரிக்கணும்; இந்தியா, எகிப்து முடிவு
-
கோல்கட்டா தீ விபத்து: ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது
-
ஜெருசலேம் அருகே காட்டுத்தீ: இஸ்ரேல் தேசிய அவசர நிலை அறிவிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிவு!
-
நாடு கடத்தப்பட இருந்த பாக்., முதியவர் உயிரிழப்பு