ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிவு!

சென்னை: சென்னையில் இன்று (மே 01) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிந்து ஒரு சவரன் ரூ.70,200க்கு விற்பனை ஆகிறது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் (ஏப்ரல் 29) தங்கம் விலை கிராமுக்கு, 40 ரூபாய் உயர்ந்து, 8,980 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 320 ரூபாய் அதிகரித்து, 71,840 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (ஏப்ரல் 30) தங்கத்தின் விலை கிராம் ரூ.8,980க்கும், சவரன் ரூ.71,840க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் இன்று (மே 01) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிந்து ஒரு சவரன் ரூ.70,200க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.205 சரிந்து, ஒரு கிராம் ரூ.8,775க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,640 சரிந்து, நகைப்பிரியர்களுக்கு சற்று நிம்மதி அளித்துள்ளது.


மேலும்
-
அந்த ஒரு சிக்ஸர் போதுமா?
-
"போர் துவக்கத்தை நீங்கள் சொல்லுங்கள், முடிவை நாங்கள் சொல்கிறோம்" - பாகிஸ்தான் 'உதார்'
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வழக்கு; விசாரிக்க சுப்ரீம்கோர்ட் மறுப்பு
-
தென் கொரியாவின் தற்காலிக அதிபர் ஹான் டக்-சூ ராஜினாமா
-
மோடி ஜம்மு-காஷ்மீருக்கு அமைதியைக் கொண்டுவருவார்: வேவ்ஸ் மாநாட்டில் ரஜினி பேச்சு
-
சினிமா தயாரிப்பில் உலகின் மையமாக மாறி வரும் இந்தியா: மோடி பெருமிதம்!