நாடு கடத்தப்பட இருந்த பாக்., முதியவர் உயிரிழப்பு

4

அமிர்தசரஸ்: பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டபோது அமிர்தசரஸில் 69 வயது முதியவர் உயிரிழந்தார்.


கடந்த வாரம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, சிந்து நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தல், இஸ்லாமாபாத்துடனான ராஜதந்திர உறவுகளை குறைத்தல் மற்றும் குறுகிய கால விசாக்களில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதன்படி பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதில் ஒருவர் உயிரிழந்தார்.

இது குறித்த அதிகாரிகள் கூறியதாவது:

பாகிஸ்தானை சேர்ந்த அப்துல் வாஹீத் 69, கடந்த 17 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வந்தார். அவர் காலாவதியான விசாவுடன் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்புவதற்காக ஜம்மு காஷ்மீர் காவல்துறை ஸ்ரீநகரிலிருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ்க்கு அழைத்து வந்தது. அவரை பாகிஸ்தானுக்கு நாடு கடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்து அழைத்து செல்வதற்கு முன் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Advertisement