கோல்கட்டா தீ விபத்து: ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது

கோல்கட்டா: கோல்கட்டா ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில், ஹோட்டலின் உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோர் போலீசால் கைது செய்யப்பட்டனர்.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவின் புர்ராபஜார் மெச்சுவா பழச்சந்தை பகுதியில் ஹோட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 14 பேர் பலியானார்கள்.இந்த சம்பவம் பொது பாதுகாப்பு மீறல் மற்றும் மோசமான தீ பாதுகாப்பு விதிகள் காரணமாக ஏற்பட்டதாக விசாரணை தெரிவிக்கிறது.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
ஹோட்டலின் உரிமையாளர் ஆகாஷ் சாவ்லா மற்றும் மேலாளர் கவுரவ் கபூர் ஆகியோர் இன்று காலையில் கைது செய்யப்பட்டனர்.
ஜோராசங்கோ காவல் நிலையத்தில் 105 (கொலைக்கு சமமானதல்ல) (குற்றமற்ற கொலை) மற்றும் மேற்கு வங்க தீயணைப்பு சேவைகள் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வாறு போலீசார் கூறினர்.
மேலும்
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வழக்கு; விசாரிக்க சுப்ரீம்கோர்ட் மறுப்பு
-
தென் கொரியாவின் தற்காலிக அதிபர் ஹான் டக்-சூ ராஜினாமா
-
மோடி ஜம்மு-காஷ்மீருக்கு அமைதியைக் கொண்டுவருவார்: வேவ்ஸ் மாநாட்டில் ரஜினி பேச்சு
-
சினிமா தயாரிப்பில் உலகின் மையமாக மாறி வரும் இந்தியா: மோடி பெருமிதம்!
-
லஷ்கர்-இ-தொய்பா தலைவனுக்கு பாதுகாப்பை பலப்படுத்திய பாகிஸ்தான்!
-
கர்நாடகாவில் கார் மோதி விபத்து; தமிழர்கள் 3 பேர் பலி!