ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் லாரிகளை நிறுத்தி பார்சல் இறக்குவதால் பாதிப்பு
ராஜபாளையம்: ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பெரும்பாலான வணிக நிறுவனங்கள், பலசரக்கு கடைகள், ஜவுளி, ஓட்டல், வங்கிகள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அமைந்துஉள்ளன.
வணிக நிறுவனங்களுக்கு வரும் பார்சல்கள்,சரக்குகள் லாரிகளில் கொண்டு வரப்பட்டு அவை சாலையோரங்களில் நிறுத்தி டெலிவரி செய்யப்பட்டு வருகிறது.
ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் தேசிய நெடுஞ்சாலை சிக்கித் தவிக்கும் நிலையில் சாலையின் இரண்டு பக்கமும்நிறுத்தப்படும் லாரிகளாலும் பார்சல்களை சுமந்து கொண்டு தொழிலாளர்கள் ரோட்டை கடந்து செல்லும் போதும் பாதிப்பு ஏற்படுகிறது.
அதிக போக்குவரத்து உள்ள பகல் நேரங்களில் நடைபெறும் இந்த விதி மீறல்களால் வாகன ஓட்டிகள், ஆம்புலன்ஸ் என அனைத்து பயணிகளும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.
கண்ணன்: ஏற்கனவே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் நெரிசல் உள்ளதுடன் லாரிகளும் தங்கள் சரக்குகளை சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் முன்பு நிறுத்தி வைத்து டெலிவரி செய்கின்றனர்.
இதனால் பின்னால் வரும் வாகனங்களுக்கு தடை ஏற்பட்டு வரிசையாக காத்திருக்கும் சூழல் உள்ளது.
கனரக லாரிகளில் பொருட்களை இறக்குவதற்கு விதிமுறைகளை வகுத்து தடையற்ற போக்குவரத்திற்கு வழி காண வேண்டும்.
மேலும்
-
தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு முயற்சியை அதிகரிக்கணும்; இந்தியா, எகிப்து முடிவு
-
கோல்கட்டா தீ விபத்து: ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது
-
ஜெருசலேம் அருகே காட்டுத்தீ: இஸ்ரேல் தேசிய அவசர நிலை அறிவிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிவு!
-
நாடு கடத்தப்பட இருந்த பாக்., முதியவர் உயிரிழப்பு