ஸ்ரீவி.,யில் நடைமேடையை கடந்து நிற்கும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டி

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷனில் நடைமேடையை கடந்து முன்பதிவில்லா பெட்டிகள்நிற்பதால் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை சரி செய்ய நடைமேடை நீளத்தை அத்திகுளம் ரோடு வரை நீட்டிக்க வேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
தற்போது ஸ்ரீவில்லிபுத்துார் வழியாக தினமும் கொல்லம்--சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் 17 பெட்டிகளுடனும், பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் 22 பெட்டிகளுடனும், வாரத்தில் 3 நாட்கள் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் 23 பெட்டிகளுடனும் இயங்கி வருகிறது.
இதில் கொல்லம் ரயில் பெட்டிகள் மட்டுமே ரயில்வே ஸ்டேஷன் நடைமேடைக்குள் நின்று விடுகிறது. ஆனால், பொதிகை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில்களின் முன்பதிவு இல்லாதபெட்டிகள் நடைமேடையை கடந்து நிற்பதால்
அதில் பயணிக்கும் பயணிகள் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் சிரமப்படுகின்றனர்.
இதனையும் கடந்து மாற்றுத்திறனாளிகள் பெட்டிகள் நிற்பதால் அவர்களை கீழிருந்து ஒருவர் ஏற்றி விடவும், பெட்டியில் இருந்து ஒருவர் உள்ளே இழுக்க வேண்டிய நிலை உள்ளது. இதில் ஒரு சில முறை பயணிகள் தவறி விழுந்து காயம் அடைந்துள்ளனர்.
எனவே, ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள 2 நடைமேடைகளையும் அத்திகுளம் ரோடு வரை நீட்டித்தால் முன்பதிவில்லா பெட்டி பயணிகள், மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி பயணிக்கும் நிலை ஏற்படும். இதற்கு மதுரை கோட்டரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
அட்டாரி-வாகா எல்லையில் விதிக்கப்பட்டிருந்த தடை; தளர்வு அளித்தது இந்தியா!
-
தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு முயற்சியை அதிகரிக்கணும்; இந்தியா, எகிப்து முடிவு
-
கோல்கட்டா தீ விபத்து: ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது
-
ஜெருசலேம் அருகே காட்டுத்தீ: இஸ்ரேல் தேசிய அவசர நிலை அறிவிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிவு!