அட்டாரி-வாகா எல்லையில் விதிக்கப்பட்டிருந்த தடை; தளர்வு அளித்தது இந்தியா!

14


புதுடில்லி: இந்தியாவில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் குடிமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், வாகா- அட்டாரி எல்லையில் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால், இரு நாடுகளை சாலை மார்க்கமாக இணைக்கும் அட்டாரி -- வாகா எல்லை மூடப்பட்டது. ஏப்ரல் 30ம் தேதிக்கு பிறகு யாரும் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த 6 நாட்களில் 55 தூதரக அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் துணை ஊழியர்கள் உள்பட பாகிஸ்தானியர்கள் 786 பேர் அட்டாரி- வாகா எல்லை வழியாக இந்தியாவை விட்டு வெளியேறி உள்ளனர்.


இந்நிலையில், இந்தியர்களை திருமணம் செய்து, பல்லாண்டுகளாக இங்கு வசிப்பவர்களும் வெளியேற்றப்படுவதாக புகார் எழுந்தது. அரசியல் கட்சியினர், தொண்டு நிறுவனத்தினர் பலர் இது பற்றி அரசிடம் முறையிட்டனர்.இதையடுத்து இந்தியாவில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானிய குடிமக்களுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்கியுள்ளது. அட்டாரி எல்லை வழியாக அவர்கள் ஏப்ரல் 30ம் தேதிக்கு பிறகும் தங்கள் நாட்டிற்குத் திரும்ப அனுமதி அளித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement