மீன்பிடி தடை காலம் எதிரொலி கோவையில் மீன் விலை உயர்வு

கோவை: மீன்பிடி தடை காலம் எதிரொலியாக, மீன்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தமிழகத்தின் கடற்பகுதிகளில், ஏப்., முதல் ஜூன் வரையிலான காலம் மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலமாக, மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது.
மீன்கள் வளத்தை பெருக்க, இக்காலத்தில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
தமிழகத்தில், இத்தடைகாலம், 61 நாட்கள் கடைபிடிக்கப்படும்.
அதன்படி, இந்தாண்டுக்கான தடைகாலம், கடந்த, 15 ம் தேதி மீன்பிடி தடைகாலம் துவங்கியது. இதையடுத்து, மீன்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில், நேற்று மீன்களின் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. அதன்படி, வஞ்சரம், ரூ.1,500, ஊளி, ரூ.500, வாவல், ரூ.160, சின்ன மத்தி, ரூ.150, பெரிய மத்தி, ரூ.220, சங்கரா, ரூ.330, அயிலை, ரூ.300, ராபாறை, ரூ.400, விளமீன், ரூ.550, நெய்மீன் (கடல்), ரூ.130, கடல்புறா, ரூ.450, புள்ளி வசந்தி, ரூ.420, கிளாத்தி, ரூ.400, கொடுவா, ரூ.680, ஓரான், ரூ.380, கடல் இறால், ரூ.600, இறால், ரூ.500 என, மீன்கள் விலை இருந்தது.
வரும் நாட்களில் மீன்கள் விலை உயர வாய்ப்புள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
அட்டாரி-வாகா எல்லையில் விதிக்கப்பட்டிருந்த தடை; தளர்வு அளித்தது இந்தியா!
-
தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு முயற்சியை அதிகரிக்கணும்; இந்தியா, எகிப்து முடிவு
-
கோல்கட்டா தீ விபத்து: ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது
-
ஜெருசலேம் அருகே காட்டுத்தீ: இஸ்ரேல் தேசிய அவசர நிலை அறிவிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிவு!