அட்சய திருதியை சிறப்பு திருமஞ்சனம் கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா

திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் திருதியை நாளை அட்சய திருதி என்றழைக்கப்படுகிறது.
எல்லா நலன்களையும் குறைவில்லாமல் அள்ளிக் கொடுக்கும் இந்த திருதியை நன்னாளை அட்சய திருதியை என அழைத்து போற்றிக் கொண்டாடுகின்றனர்.
திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண ஜெகநாத பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் கல்யாண ஜெகநாத பெருமாள் நான்கு ரத வீதிகளிலும் உலா வந்தார்.
கோயில் ஸ்தானீக பட்டாச்சாரியார்களால் நாலாயிர திவ்யபிரபந்தப் பாடல்கள் பாடப்பட்டன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அட்சய திருதியை முன்னிட்டு ஏராளமானோர் வீடுகளில் உப்பு, அரிசி, மஞ்சள் பொடி உள்ளிட்டவைகளை பூஜையறையில் வைத்து வழிபாடு செய்தனர்.
மகாலட்சுமி, குபேரர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
மேலும்
-
அட்டாரி-வாகா எல்லையில் விதிக்கப்பட்டிருந்த தடை; தளர்வு அளித்தது இந்தியா!
-
தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு முயற்சியை அதிகரிக்கணும்; இந்தியா, எகிப்து முடிவு
-
கோல்கட்டா தீ விபத்து: ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது
-
ஜெருசலேம் அருகே காட்டுத்தீ: இஸ்ரேல் தேசிய அவசர நிலை அறிவிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிவு!