ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி: முதல்வர் பாராட்டு

ராமநாதபுரம்: ஐ.ஏ.எஸ்., தேர்வில் தமிழக அளவில் 5வது இடம் பெற்றுள்ள ராமநாதபுரம் மாணவர் ஆர்.ஸ்ரீரஷத்தை முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார்.

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ஆர். ஸ்ரீரஷத் 22. இவர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்.,ஐ.ஆர்.எஸ்., உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான 2024 யு.பி.எஸ்.சி., சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார்.

இதில் ஸ்ரீரஷத் இந்திய அளவில் 52வது இடமும், தமிழக அளவில் 5வது இடம் பெற்றுள்ளார். அவருக்குசென்னையில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். தலைமைச் செயலாளர் முருகானந்தம், துணை முதல்வர் உதயநிதி மற்றும் அதிகாரிகள் வாழ்த்தினர்.

Advertisement